முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் : டெல்லிக்கு ராய்கரில் இருந்து புறப்படுகிறது - ரயில்வே வாரியத் தலைவர் தகவல்

தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக் குறையைப் போக்க, முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ராய்கரில் இருந்து புறப்படுகிறது என ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் : டெல்லிக்கு ராய்கரில் இருந்து புறப்படுகிறது - ரயில்வே வாரியத் தலைவர் தகவல்
x
ஆக்சிஜன் தொடர்பான விவரங்கள் குறித்து  காணொளி மூலம் உரையாடிய ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா, சுமார் 70 மெட்ரிக் டன் அளவிலான  4 டேங்கர்களை ஏற்றிக் கொண்டு, ஒரு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் சத்தீஸ்கரின் ராய்கரில் இருந்து இன்று இரவு டெல்லிக்கு புறப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். நாளை  இரவுக்குள் இந்த ரயில் டெல்லி சென்றடையும்  என அவர் தெரிவித்துள்ளார்.
 தலைநகர் டெல்லி செல்லும் முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இதுவே எனவும், ஆக்ஸிஜனைப் பெற டேங்கர் லாரிகளை தயார் செய்ய டெல்லி அரசுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கொண்டு செல்ல ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளதகவும் சுனீத் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், தேவை உள்ள இடங்களில் ரயில் சேவை  அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்