அத்தியாவசிய மருந்து-பதுக்கினால் நடவடிக்கை : மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

தடுப்பூசி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை பதுக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
x
11 மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய பிரதமர், ஆக்சிஜன் தேவையை எதிர்கொள்ள தொழில்துறையையும் திருப்பி விடப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார். அனைத்து மாநில அரசுகளும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் கூட்டாக இணைந்து பணியாற்றி, மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆக்சிஜனை வேகமாக எடுத்துச்செல்ல, ரயில்வேயின் சார்பில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார். மகாராஷ்டிரா மருத்துவமனை தீ விபத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், மருத்துவமனைகளின் பாதுகாப்பையும் புறந்தள்ளி விடக்கூடாது என அறிவுறுத்தினார். தடுப்பூசி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை பதுக்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்