எல்லை தாண்டி வந்த புறா - புறா மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை!

பஞ்சாப் மாநில எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் புறா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையால் காவல்துறையினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
எல்லை தாண்டி வந்த புறா - புறா மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை!
x
பஞ்சாப் மாநில எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் புறா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையால் காவல்துறையினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

ராஜாக்கள் காலந்தொட்டே தூது செல்ல பழக்கப்படுத்தப்பட்ட பறவை புறா... தமிழ்நாட்டில் தற்போதும் புறாக்களை வைத்து பந்தயங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன....

அந்தப் புறா ஒன்று தான் காவல்துறைக்குத் தற்போது தலைவலியாக மாறியுள்ளது...

பஞ்சாப் மாநிலத்தின், இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் உள்ள ரோரன் வாலாவில், எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்...

அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்த புறா ஒன்று உட்கார வேறு இடமே இல்லாதது போல, எல்லைப்பாதுகாப்பு படை வீரரின் தோளில் வந்து தைரியமாக அமர்ந்துள்ளது...

அதன் காலில் சுற்றப்பட்ட சிறு தாளில், ரகசிய தொடர்பு எண் ஒன்று குறிப்பிடப்பட்டிருந்தது... பாகிஸ்தானில் இருந்து ரகசிய தொடர்புக்காக, புறா மூலம் மர்ம நபர்கள் யாரோ எண்ணை எழுதி அனுப்பியுள்ளனர்...

உடனே பாதுகப்புப் படை வீரர்கள் அந்தப் புறாவக் கொண்டு வந்து உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்...

அத்துடன் நின்று விடவில்லை... சந்தேகத்திற்கிடமான அந்தப் புறா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்...

இந்த நூதன கோரிக்கையால், புறா மீது எந்தப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்வது என விழி பிதுங்கி நிற்கும் போலீசார், சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து வருகின்றனர்... 

அத்துடன், புறாவின் காலில் கட்டப்பட்ட ரகசிய எண் குறித்தும் தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது...

இதற்கு முன்னரும் இதே போல எல்லை தாண்டி புறாக்கள் வந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன... ஆனால் புறா மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டதில்லை...

மனிதர்கள் செய்யும் தவறுக்கு அப்பாவியான புறாவைத் தண்டிக்க முடியுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ள நிலையில், தாந்தான் பிரச்சினைக்குக் காரணகர்த்தா என்பதைக் கூட அறியாமல் அந்தப் புறா ஒய்யாரமாக போலீசாரின் கூண்டுக்குள் சுற்றி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்