மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் கசிவு - ஆக்சிஜன் கசிவால் 24 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டதால் நோயாளிகள் 24 பேர் உயிரிழந்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் கசிவு - ஆக்சிஜன் கசிவால் 24 பேர் உயிரிழப்பு
x
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டதால் நோயாளிகள் 24 பேர் உயிரிழந்தனர்.  

நாசிக்கில் உள்ள ஜாகிர் ஹுசைன் மருத்துவமனையில் டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கசிவு ஏற்பட்டது. உடனடியாக கசிவை கட்டுப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்ட நிலையில், மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வழங்குவது அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் ஆக்சிஜன் அழுத்தம் குறைந்து, வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த 24 நோயாளிகள் உயிரிழந்ததாக நாசிக் மாநகராட்சி ஆணையர் கைலாஷ் ஜாதவ் தெரிவித்தார். மொத்தம் 170 நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மற்ற நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்