கேரளாவில் மீண்டும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை

கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ள நிலைய்ல, மக்கள் அதிகளவில் தடுப்பூசி செலுத்த மையங்களில் காத்திருக்கின்றனர்.
கேரளாவில் மீண்டும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை
x
கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ள நிலைய்ல, மக்கள் அதிகளவில் தடுப்பூசி செலுத்த மையங்களில் காத்திருக்கின்றனர்.

கேரளா மாநிலத்தில் மெகா தடுப்பூசி திருவிழா மூலம் தினமும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்த அம்மாநில  சுகாதாரத் துறையினர் , மருத்துவ முகாம்களை திறந்து தடுப்பூசி செலுத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய அரசு குறைந்தளவில் தடுப்பூசிகள் வழங்குவதால், மீண்டும் மாநிலத்தில் பல இடங்களில் தடுப்பூசி  பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள 158 தடுப்பூசி மையங்களில், தற்போது 30 மட்டுமே செயல்பட்டு வருகின்றன என தகவல் வெளியாகி உள்ளது.   திருவனந்தபுரத்தில் உள்ள ஜிம்மி ஜார்ஜ் உட்புற மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை தடுப்பூசி போடப்படாது என்று மைதானத்தில் வெளியே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் வயதானவர்கள் உட்பட இரண்டாவது டோஸைப் பெற வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோட்டயத்தில் உள்ள தடுப்பூசி மையங்கள்ல  மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.  காலை 6 மணி முதல் மக்கள் வரிசையில் நின்று வருகின்றனர். இங்கு ஒரு நாளைக்கு 1,000 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.   பத்தனம்திட்டா மாவட்டத்தில்  பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் உள்ள பல தடுப்பூசி மையங்களில், ஒரு நாளைக்கு 100 பேருக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.  இதனிடையே, 50 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக கேரளாவிற்கு வழங்குமாறு அம்மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்