ஒரே நாளில் 2.59 லட்சம் பேருக்கு தொற்று -1,619 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
x
இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில்  2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 ஆக பதிவான நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 761 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே நாளில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 761 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்
தற்போது 20 லட்சத்து 31 ஆயிரத்து 977 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்தியாவில் இதுவரை 1 புள்ளி 53 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 லட்சத்து 80 ஆயிரத்து 530 பேர் கொரோனாவால் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 12 கோடியே 71 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்