"90 நாட்களுக்குள் தரிசனம் செய்யலாம்" - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு முன்பதிவு செய்து கொரோனாவால் வர முடியாத பக்தர்கள், வேறு ஒருநாளில் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
90 நாட்களுக்குள் தரிசனம் செய்யலாம் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு முன்பதிவு செய்து கொரோனாவால் வர முடியாத பக்தர்கள், வேறு ஒருநாளில் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் நிறுத்தப்பட்டு, சிறப்பு தரிசனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் சிறப்பு தரிசனத்திற்காக முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனாவால் குறிப்பிட்ட தேதிக்கு வர முடியாமல் போனால், அடுத்த 90 நாட்களுக்குள் தரிசனம் செய்துக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் மே மாதத்தில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்