"தடுப்பூசி தொடர்பான தகவல்கள், பொது வெளியில் வெளியிட வேண்டும்" - மோடி அரசுக்கு மன்மோகன் சிங் வலியுறுத்தல்

தடுப்பூசி தொடர்பான தகவல்களை மத்திய அரசு பொது வெளியில் வெளியிட வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.
தடுப்பூசி தொடர்பான தகவல்கள், பொது வெளியில் வெளியிட வேண்டும் - மோடி அரசுக்கு மன்மோகன் சிங் வலியுறுத்தல்
x
தடுப்பூசி தொடர்பான தகவல்களை மத்திய அரசு பொது வெளியில் வெளியிட வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தடுப்பூசிகளை வாங்குவதற்கு எந்தெந்த நிறுவனங்களிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது, என்றும், அவற்றில் அடுத்த 6 மாதங்களுக்கு தடுப்பூசி வினியோகம் செய்ய எந்தெந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன என்பது தொடர்பான விவரங்களை அரசு பொது வெளியில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தற்போதைய காலகட்டத்தில் எத்தனை பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது  என்றும், அவற்றுக்குத் தேவையான போதுமான ஆர்டர்களை தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், புதிதாக வாங்கப்படும் தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு வெளிப்படையான நடைமுறையின் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்றும், அவற்றில் 10 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு அவசர காலத் தேவைக்காக வைத்துக் கொள்ள வேண்டும் என மன்மோகன் சிங் யோசனை தெரிவித்துள்ளார். 45 வயதுக்கு குறைவானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் முன்கள பணியாளர்கள் யார் என்பதை தீர்மானிக்க மாநில அரசுகளுக்கு சில நெகிழ்வுத்தன்மைகளை வழங்க வேண்டும் என்றும், 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தாலும் பள்ளி ஆசிரியர்கள், வாடகை கார் ஓட்டுனர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். உள்நாட்டில் தடுப்பூசி வினியோகம் குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருப்பதால், வெளிநாடுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய உடனடியாக அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்