ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை அதிகரிப்பு - பல இடங்களில் அலைந்து திரியும் மக்கள்

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில், அவை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதும், போலி மருந்து நடமாட்டமும் மக்களை அச்சம் அடைய செய்துள்ளது.
ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை அதிகரிப்பு - பல இடங்களில் அலைந்து திரியும் மக்கள்
x
இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில், அவை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதும், போலி மருந்து நடமாட்டமும் மக்களை அச்சம் அடைய செய்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் தற்போது ஆக்சிஜன், ரெம்டெசிவிர் ஊசி மருந்து, மருத்துவமனைகளில் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

சில இடங்களில் கொரோனாவால் உயிரிழப்பவர்களால் தகன மையங்கள் சடலங்களால் நிரம்பி வழிகின்றன. 

இந்நிலையில் வைரஸ் கொல்லி மருந்தான ரெம்டெசிவிர் ஊசி மருந்து தேவை அதிகரித்துள்ளது.

இந்த மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ள மத்திய அரசு, உற்பத்தியை அதிகரிக்க அவசரகால நடவடிக்கையும் மேற்கொண்டிருக்கிறது. மருந்து இருப்பு நிலவரம், விற்பனையாளர்கள் விபரங்களை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டது. 
 
இதற்கிடையே மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசிடம் தங்களுக்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன. மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உறவினர்களை காக்க மக்கள் ரெம்டெசிவிர் ஊசி மருந்தை வாங்க பல இடங்களில் அலைந்து திரியும் சம்பவம் தொடர்கிறது. 

மும்பை, புனே, ராய்பூர், லக்னோ உள்பட பல நகரங்களில் தட்டுப்பாடு காரணமாக கிடைக்கும் மருந்தகங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்