நீளமான தலைமுடியால் கின்னஸ் சாதனை - தலைமுடியை வெட்டினார் நீலான்ஷி பட்டேல்

உலகின் மிக நீளமான தலைமுடிக்கான கின்னஸ் சாதனை படைத்த நீலான்ஷி பட்டேல், 12 ஆண்டுகளுக்கு பின்னர் தலைமுடியை வெட்டியுள்ளார்.
நீளமான தலைமுடியால் கின்னஸ் சாதனை - தலைமுடியை வெட்டினார் நீலான்ஷி பட்டேல்
x
குஜராத் மாநிலம் மொடாஸா பகுதியைச் சேர்ந்தவர், நீலான்ஷி பட்டேல். 18 வயதே நிரம்பிய இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிக நீளமான தலைமுடிக்கான கின்னஸ் சாதனையை படைத்தார். அப்போது, 170 புள்ளி 5 செண்டிமீட்டர் நீளத்தில் இருந்த இவரது தலைமுடி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மூன்று செண்டிமீட்டர்கள் கூடுதலாக வளர்ந்திருப்பதாக, ஏற்கனவே தெரிவித்திருந்தார். தனது 6 வயதில் இருந்து தலை முடியை வளர்க்கத் தொடங்கிய நீலான்ஷி, அதனை முறையாக பராமரித்ததால் உலக சாதனைக்கு சொந்தமானார். இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தனது தலைமுடியை வெட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை நீலான்ஷி வெளியிட்டுள்ள நிலையில், இந்த புதிய கெட்-அப் மிக அழகாக இருப்பதாக, கின்னஸ் தரப்பு தெரிவித்திருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்