அமலாக்கத் துறை மீதான வழக்குகள் ரத்து - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தை விசாரித்து வரும் அமலாக்கத் துறை மீது கேரள குற்றப் பிரிவில் உள்ள இரு வழக்குகளையும் அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அமலாக்கத் துறை மீதான வழக்குகள் ரத்து - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
x
கேரள தங்க கடத்தல் விவகாரத்தை  மத்திய அரசின் கீழ் உள்ள சுங்கத்துறை, அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ ஆகிய பிரிவு அதிகாரிகள்  விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கேரள அரசின் உள்விவகாரங்களில் அமலாக்கத்துறை தலையிடுவதாகவும், தங்க கடத்தல் வழக்கில் உயரதிகாரிகள் பெயரை நிர்ப்பந்தம் கொடுத்து சேர்த்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கேரள குற்றப் பிரிவு  இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளது.இதை எதிர்த்து அமலாக்கத்துறை கேரள உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தது.மனுவை விசாரித்த நீதிபதி அருண் அமலாக்கத் துறை மீதான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.மேலும்  குற்றப் பிரிவினர் தங்கள் தொடர் நடவடிக்கைகளை நிறுத்துமாறு நீதிபதி ஆணையிட்டார். குற்றப்பிரிவு இவ்விவகாரம் தொடர்பாக சேகரித்த தடயங்கள் மற்றும் வாக்குமூலங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்