தேர்தல் விதிமுறையை மீறியதாக புகார்; மாநில பா.ஜ.க. தலைவருக்கு மீண்டும் தடை - தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் பேசியதாக மேற்கு வங்க மாநில பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ்க்கு தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்துள்ளது.
தேர்தல் விதிமுறையை மீறியதாக புகார்; மாநில பா.ஜ.க. தலைவருக்கு மீண்டும் தடை - தேர்தல் ஆணையம் உத்தரவு
x
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் பேசியதாக மேற்கு வங்க மாநில பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ்க்கு தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்துள்ளது. நேற்று இரவு 7 மணியிலிருந்து இன்று இரவு 7 மணி வரை பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வடக்கு பர்க்னாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் பேசிய திலீப் கோஷ், யாரெல்லாம் சட்டத்தை கையில் எடுக்கிறார்களோ அங்கெல்லாம் சித்தால் குச்சி துப்பாக்கி சூடு சம்பவம் போன்று மேலும் பல சம்பவங்கள் நடைபெறும் என பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்