கங்கைக்கரையில் புனித ஆரத்தி நிகழ்ச்சி : 13.5 லட்சம் பேர் குவிந்ததால் பரபரப்பு - ஒரே நாளில் 1,953 பேருக்கு கொரோனா தொற்று

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில், கும்பமேளாவை ஒட்டி, கங்கை நதியில் லட்சக்கணக்கானோர், புனித நீராடினர்.
கங்கைக்கரையில் புனித ஆரத்தி நிகழ்ச்சி : 13.5 லட்சம்  பேர் குவிந்ததால் பரபரப்பு - ஒரே நாளில் 1,953 பேருக்கு கொரோனா தொற்று
x
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில், கும்பமேளாவை ஒட்டி, கங்கை நதியில்  லட்சக்கணக்கானோர், புனித நீராடினர். கங்கை கரையில் புனித ஆரத்தி எடுக்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற 13 லட்சத்து 51 ஆயிரத்து 631 பக்தர்கள், எந்த வித சமூக இடைவெளி இல்லாமல், முக கவசம் இன்றியும், ஒரே இடத்தில் கூடினர். இதனால், கொரோனா அதிகளவில் பரவும் சூழல் உருவாகி உள்ளதாக, உத்தரகாண்ட் காவல்துறையினர் தெரிவித்தனர். உத்தரகாண்ட்டில் ஒரே நாளில், ஆயிரத்து 953 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்