சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10 வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
x
கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10 வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சிபிஎஸ்இ தேர்வை நடத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதில், மாணவர்கள் கல்வி நலனில் எந்த பாதிப்பும் ஏற்படாமல், அவர்களின் உடல்நலம் கவனிக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யும் என தெரிவித்தார். கூட்டத்திற்கு பிறகு சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே 4ஆம் தேதி தொடங்க இருந்த 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி நிலவும் சூழலை பொறுத்து தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும், தேர்வு நடத்தினால் 15 நாட்கள் முன்கூட்டியே அட்டவணை வெளியிடப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

10ம் வகுப்பு தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்களின் உள்மதிப்பீட்டின்படி முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவில் அதிருப்தி இருந்தால், தொடர்புடைய மாணவர்களுக்கு சூழலை பொறுத்து நேரடி தேர்வு நடைபெறும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 







Next Story

மேலும் செய்திகள்