புலம்பெயர் குழந்தைகளின் உரிமை வழக்கு - தமிழக அரசு பதில் மனு

புலம்பெயர் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க கோரிய வழக்கில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
புலம்பெயர் குழந்தைகளின் உரிமை வழக்கு - தமிழக அரசு பதில் மனு
x
புலம்பெயர் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க கோரிய வழக்கில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் உரிமைகள் தொடர்பாக, குழந்தைகள் உரிமை அறக்கட்டளை எனும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தமிழகத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 209 குழந்தை திருமணங்களும், 2020-ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 208 குழந்தை திருமணங்களும் தடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவருவதர்கான போக்குவரத்துக்கு செலவுக்காக, கடந்த கல்வி ஆண்டில் 536 குழந்தைகளுக்கு தலா 300 ரூபாய் மாதந்தோறும் வழங்கப்பட்டதுள்ளதாக தமிழக அரசு கூறியிருக்கிறது.

இதுமட்டுமின்றி கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெற, கட்டுமானங்கள் நடைபெறும் பகுதிகளில் 50 தற்காலிக அங்கன்வாடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவற்றால் 2019-ஆம் ஆண்டு வரை ஆயிரத்து 36 குழந்தைகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிராமப்புறங்கள் முதல் மாவட்டங்கள் வரை மாநிலம் முழுவதும் மொத்தம் 13 ஆயிரத்து 717 குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் பதில் மனுவில் சொல்லப்பட்டிருக்கிறது.


மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது, புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களின் நிலை குறித்து அறிக்கையை அளிக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






Next Story

மேலும் செய்திகள்