"சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு - ரத்து செய்க" : மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வலியுறுத்தல்

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்,.
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு - ரத்து செய்க : மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வலியுறுத்தல்
x
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்,. டெல்லியில் காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  குழந்தைகளின் வாழ்க்கையும், ஆரோக்கியமும் தங்களுக்கு மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்,. டெல்லியில் 6 லட்சம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ. தேர்வு எழுத உள்ளதாலும், அவர்களுக்காக 1 லட்சம் ஆசிரியர்கள்  தேர்வு மையங்களுக்கு வரவேண்டும் என்பதாலும் கொரோனா பரவும் சூழல் ஏற்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அப்போது தெரிவித்தார்,. தலைநகரில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த போவதில்லை என்றும் அவசிய பயணத்துக்கு மட்டுமே வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வரவேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்