அயல்நாடுகளின் தடுப்பூசிகளுக்கு அனுமதி - கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அதிரடி

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட அவசரக் கால பயன்பாட்டுக்கான தடுப்பூசிகளை, நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என்ற தேசிய நிபுணர் குழு பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அயல்நாடுகளின் தடுப்பூசிகளுக்கு அனுமதி - கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அதிரடி
x
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் அவசரகால பயன்பாட்டுக்கு சில தடுப்பூசிகளுக்கு  அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த நாடுகளில் தயாரிக்கப்பட்டு, அவசரக் கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை  தேசிய நிபுணர் குழுவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இவை தவிர உலக சுகாதார நிறுவனத்தால் பட்டியலிடப்பட்டு உள்ள தடுப்பூசிகளையும் அனுமதிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசின் இந்த முடிவு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து, மக்களுக்கு செலுத்த உதவிக்கரமாக அமையும் என கூறப்படுகிறது. இந்த தடுப்பூசிகளை பெரும்பாலான மக்களுக்கு பயன்படுத்தும் முன்பு, முதல் 100 பேருக்கு அவற்றை செலுத்தி 7 நாள் தீவிரமாக கண்காணித்து, அதன் பாதுகாப்புத் தன்மையை ஆய்வு செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்