(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்
பதிவு : ஏப்ரல் 11, 2021, 01:05 PM
(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்
(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள் 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் நடைபெற்ற என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்ற ஹர்திபோரா பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.  புதிதாக பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த இளைஞரிடம் பெற்றோர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சரணடையை முயற்சித்தோம், ஆனால் மற்ற பயங்கரவாதிகள் இளைஞரை சரணடைய அனுமதிக்கவில்லை என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் தெக்ரி கர்வால் மாவட்டம் புதோகி பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில்  கொளுந்துவிட்டு எரியும் தீ பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. அங்கு தீயை அணைக்க வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் போராடி வருகிறார்கள். இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரி கோகோ ரோஸ், ஒரு ஹெக்டேர் பரப்பளவில் தீ பரவியுள்ளது என்றும் தீ விபத்து நேரிட காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மகாராஷ்டிராவில் அதிதீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்று ஊரடங்கு தொடரும் நிலையில் பெரும்பாலான சாலைகளில் வாகன போக்குவரத்து காணப்படவில்லை. மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலைய கட்டிட முன்புற சாலை வெறிச்சோடியது.

குஜராத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். இதனால் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அவர்கள் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள். கடந்த முறை ஊரடங்கு போடப்பட்ட போது மிகவும் மோசமான சூழலை எதிர்க்கொண்டோம் எனக் கூறும் அவர்கள், முன்னதாகவே சொந்த ஊர் செல்கிறோம் எனக் குறிப்பிடுகின்றனர்.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். 

கொலம்பியாவின் தலைநகர் பகோடாவில், கொரோனா பரவல் காரணமாக 3 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் மூன்றாவது அலை தாக்கத் துவங்கியுள்ள நிலையில், தொற்றுப்பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் 70 சதவீதம் நிரம்பி விட்டதாலும், புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பகோடாவின் மேயர் க்ளாடியா லோபஸ் தெரிவித்தார். 

கோனி தீவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவானது கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில், கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நியூயார்க் மேயர் பில் டே பிளாசியோ பொழுதுபோக்குப் பூங்காவைத் திறந்து வைத்தார். கொரோனா விதிகளைப் பின்பற்றி இப்பூங்கா திறக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விழாவிற்கு அப்பகுதி சுகாதாரப்பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட மாதங்களுக்குப் பிறகு பொழுது போக்குப் பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

கரிப்பியன் தீவு செயின் வின்சென்ட் பகுதியில் உள்ள "லா சுஃப்ரியெர்" எரிமலை வெடிக்கத் துவங்கியுள்ள நிலையில், அப்பகுதிக்கு அருகில் வசிப்பவர்களின் நிலை மிகவும் கடினமாக இருக்கும் என பேரிடர் மீட்புக்குழுவின கருத்து தெரிவித்தனர். விண்ணை முட்டும் புகை மற்றும் சாம்பலைக் கக்கும் இந்த எரிமலையினால் சாலைகள், வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் சாம்பல் துகள்கள் நிரம்பி படர்ந்துள்ளன. இந்நிலையில், அப்பகுதி இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் நீண்ட நாட்கள் பிடிக்கும் என மீட்புக்குழுவினர் கருத்து தெரிவித்தனர். அத்துடன் எரிமலை இருக்கும் பகுதிக்கு அருகில் வசிப்பவர்களை மிக விரைவாக மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6403 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1019 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

170 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

43 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

32 views

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

29 views

பிற செய்திகள்

கிழக்கு ஜெருசலத்தில் இஸ்ரேலிய போலீசாருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் மோதல்

கிழக்கு ஜெருசலத்தில் இஸ்ரேலிய போலீசாருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் மோதல்.

8 views

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு... பைடன் அரசின் திட்டம் நிறைவேறுமா...?

அமெரிக்காவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 73 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

14 views

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மோதல்... வான்வெளி தாக்குதல் - 20பேர் உயிரிழப்பு

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

67 views

தேம்ஸ் நதியோரம் மாட்டிக் கொண்ட திமிங்கலம் - இரவு பகலாகப் போராடி மீட்பு

லண்டனின் தேம்ஸ் நதியில் சிக்கித் தவித்த சிறிய திமிங்கலம் ஒன்றை இரவு பகலாகப் போராடி மீட்புக் குழுவினர் மீட்டனர்.

162 views

ஜெர்மனி அனுப்பிய ஆக்சிஜன் தயாரிப்பு கருவி - ஜெர்மனி தூதர் ஆய்வு

இந்தியாவிற்கு ஜெர்மனி அனுப்பிய ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகளை அந்நாட்டு தூதர் வால்ட்டர் ஜெ லிண்டர் ஆய்வு செய்தார்.

40 views

சீனா ஏவிய ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம்.. இந்தியப் பெருங்கடலில் விழுந்தது

சீனா ஏவிய ராக்கேட்டின் மிகப்பெரிய பாகம் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.