காசி ஞான்வாபி மசூதி விவகாரம் - கோவில் பகுதியில் மசூதி என வழக்கு

காசி ஞான்வாபி மசூதி நில பிரச்சினை வழக்கில் இந்திய தொல்லியல் ஆராய்ச்சி மையம் ஆய்வினை மேற்கொள்ள வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காசி ஞான்வாபி மசூதி விவகாரம் - கோவில் பகுதியில் மசூதி என வழக்கு
x
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதா் கோவிலுக்கு அருகே உள்ள ஞான்வாபி மசூதி இருக்கும் இடம் கோவிலுக்கு சொந்தமானது என வழக்கறிஞர் விஜய் சங்கா் ரஸ்தோகி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. முகலாய மன்னா் ஒளரங்கசீப் காசி விஸ்வநாதா் கோவிலின் பகுதியை அகற்றி மசூதியை கட்டினார் என அவர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறைக்கு உத்தரவிட்டுள்ளது என வழக்கறிஞர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்