ரபேல் ஒப்பந்தத்துக்கு ரூ. 9 கோடி லஞ்சம்? - மீண்டும் வெடித்த சர்ச்சை
பதிவு : ஏப்ரல் 08, 2021, 05:46 PM
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே மீண்டும் வெடித்துள்ள மோதலுக்கு காரணம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு பிரான்சுடன் ஒப்பந்தம் செய்தது.இந்த ஒப்பந்தப்படி பிரான்சின் டசால்ட் நிறுவனம் 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து விமானங்களையும் இந்தியாவுக்கு வழங்க வேண்டும். அந்தவகையில் இதுவரையில் 14 விமானங்கள் இந்தியா வந்துள்ளன. இந்திய பாதுகாப்பு துறையில் சமீபத்திய மிகப்பெரிய ஒப்பந்தமாக பார்க்கப்படும் இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.ஏற்கனவே தங்கள் ஆட்சியில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு வாங்கப்படுகிறது என்றும் விமானங்கள் தயாரிப்பில் பங்குதாரராக அனில் அம்பானியின் நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இவ்விவகாரம் தொடர்பான வழக்கில் எந்தவித முறைகேடுகளும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததும் சர்ச்சைகள் ஓய்ந்தன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மீடியாபார்ட் (Mediapart ) செய்தி நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்துக்காக இடைத்தரகர் ஒருவருக்கு கமிஷன் வழங்கப்பட்டுள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது.டசால்ட் நிறுவனம் இடைத்தரகருக்கு 1.1 மில்லியன் யூரோ, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாயை கமிஷனாக வழங்கியுள்ளது என்றும்பிரெஞ்சு ஊழல் தடுப்பு நிறுவனம் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெப்சிஸ் சொல்யூசன்ஸ் என்ற இந்திய நிறுவனத்துக்கு கமிஷன் கைமாறப்பட்டு இருப்பதாகவும் இந்த தொகையை வாடிக்கையாளருக்கு பரிசுகள் என டசால்ட் நிறுவனம் செலவாக காட்டியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. டெப்சிஸ் நிறுவனம், அகஸ்டா வெஸ்லேண்ட் ஹெலிகாப்டர்  முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சுஷேன் மோகன் குப்தாவின் நிறுவனமாகும்.இந்த தகவல் மீண்டும் இந்தியாவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, அப்படி கமிஷன் கொடுக்கப்பட்டு இருந்தால், இந்திய அரசில் யாருக்கு கொடுக்கப்பட்டது? என்பதை கண்டறிய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டுக்கு பதில் கூறுவாரா? என்றும் கேள்வியை எழுப்பியிருந்தார்.இதற்கிடையே குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என பா.ஜனதா மறுத்துள்ளது.பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், முறைகேடு என வெளியாகியிருக்கும் தகவல், அங்குள்ள கார்பரேட் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியால் வெளியாகி இருக்கலாம் என்று கூறியுள்ளார்.இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பாஜக இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் விவகாரத்தில் கர்மவினையில் இருந்து யாரும் தப்ப முடியாது என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6598 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1199 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

267 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

76 views

பிற செய்திகள்

கொரோனா உயிரிழப்பு - ரூ. 50,000 நிவாரணம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

8 views

கொரோனாவுக்கு 1,017 மருத்துவர்கள் பலி - தமிழகத்தில் 2-ம் கட்டத்தில் 11 பேர் பலி

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 1,017 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

106 views

கொரோனா வைரஸ்க்கு நாட்டு மருந்து; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனா தொற்றுக்கு இலவச நாட்டு மருந்து வாங்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

412 views

நாரதா லஞ்ச வழக்கில் திடீர் திருப்பம்; மேற்குவங்க அமைச்சர்கள் உட்பட 4 பேர் கைது - மம்தா பானர்ஜி ஆவேசம்

நாரதா லஞ்ச வழக்கு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர்கள் உட்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

47 views

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு; அதிகரிக்கும் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியுள்ள நிலையில், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

102 views

கேரள காங். தலைவர் பெயரில் மோசடி; வங்கி கணக்கில் பணத்தை அனுப்பிய நண்பர்கள்

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பண மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.