மாநிலங்களவை தேர்தல் தேதி வாபஸ் ஏன்? "காரணத்தை எழுத்துப்பூர்வாக தெரிவிக்கவும்" - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் மாநிலங்களவை தேர்தல் தேதியை வாபஸ் பெற்றதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாநிலங்களவை தேர்தல் தேதி வாபஸ் ஏன்? காரணத்தை எழுத்துப்பூர்வாக தெரிவிக்கவும் - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
x
கேரளாவில் ஏப்ரல் 21ஆம் தேதியுடன் 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தலை நடத்த முடிவு செய்த தேர்தல் ஆணையம், பின்னர் தேதியை திரும்ப பெற்றது. மத்திய சட்டத்துறையின் பரிந்துரையின் பேரில் திரும்ப பெறப்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற செயலாளர் எஸ்.சர்மா கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், தீர்மானிக்கப்பட்ட தேதி மாற்றப்பட்டது ஏன் என்பதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரிக்கப்பட உள்ள நிலையில், உறுப்பினர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதாக, தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்