உத்தரபிரதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா - இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அங்கு இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா - இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
x
உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அங்கு இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொற்றை வேகமாக தடுக்கும் வகையில்,  லக்னோவில் இன்று இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, லக்னோ காவல்துறை ஆணையர் டி.கே.தகூர் தெரிவித்துள்ளார். இதனிடையே, லக்னோ - டெல்லி இடையேயான  லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில், 9-ம் தேதி  முதல் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ராய்ப்பூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு : மாவட்ட ஆட்சியர் பாரதிதாசன் உத்தரவு

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 9ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராய்ப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாவட்டத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாவட்ட ஆட்சியர் பாரதி தாசன் அறிவித்துள்ளார். மேலும் 9ஆம் தேதி மாலை 6 மணி முதல் 19ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். மருந்தகங்கள், முக்கிய அரசு அலுவலகங்கள் தவிர அனைத்து கடைகள், நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது

ஹரியானாவில் புதிதாக 2,366 பேருக்கு கொரோனா

ஹரியானாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 2 ஆயிரத்து 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை ஹரியானாவில்15 ஆயிரத்து 237 பேர் சிகிச்சை பெற்று வருவதாக, அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 3 லட்சத்து, 4 ஆயிரத்து 638 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில், 2 லட்சத்து, 86 ஆயிரத்து 182 பேர் குணமடைந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 60000 பேருக்குதொற்று

மகாராஷ்டிராவில் நேற்று ஒரேநாளில் 59ஆயிரத்து 907 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 322 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.  மகாராஷ்டிராவில் தற்போது 5 லட்சத்து ஆயிரத்து 559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு மொத்தம் 31 லட்சத்து 73 ஆயிரத்து 261 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 26 லட்சத்து13 ஆயிரத்து 627 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா "தட்டுப்பாட்டால் தடுப்பூசி பணி நிறுத்தம்"

மகாராஷ்டிராவில்,கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால், அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் பெறப்பட்ட உடன் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பன்வெல் மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனிடையே, நாசிக் மாவட்டத்தில் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை நெறிப்படுத்த சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சூரஜ் மாந்த்ரே தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்