இஸ்லாமியர்கள் வாக்குகள் பிரியக்கூடாது என பேச்சு; மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இஸ்லாமியர்கள் வாக்குகள் பிரியக்கூடாது என பேச்சு; மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
x
இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இஸ்லாமியர்கள் வேறு கட்சிகளுக்கு வாக்களித்து ஓட்டை பிரிக்காமல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என மம்தா பேசியதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்திருந்தது. இதுகுறித்து மம்தாவிடம் விளக்கம் கேட்டுள்ள தேர்தல் ஆணையம், 48 மணி நேரத்தில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

பாஜகவின் மிரட்டல்களுக்கு ஒருபோதும் வளைந்து கொடுக்க மாட்டேன் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கூச் பெஹர் பகுதியில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்ட அவர், பாஜகவினர் தங்களுடைய பணத்தை கொண்டு தன்னை எதுவும் செய்ய முடியாது என சவால் விடுத்தார். மேலும், தான் உடைந்து போனாலும், ஒரு போதும் வளைந்து கொடுக்க மாட்டேன் என குறிப்பிட்ட மம்தா, தான் வங்கத்து பெண் புலி எனவும் அதிரடியாக பேசியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்