"போதுமான தடுப்பூசி இருப்பு இல்லை" - மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர்

மகாராஷ்டிராவில் பல்வேறு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போதுமான அளவு இருப்பு இல்லையென மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
போதுமான தடுப்பூசி இருப்பு இல்லை - மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர்
x
மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மும்பையில் செய்தியாளரிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே, கடந்த 24 மணி நேரங்களில் 33 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் தற்போது இருப்பில் இருக்கும் 14 லட்சம் தடுப்பூசிகளும் 3 நாட்களில் தீர்ந்துவிடும் என்றும் மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும் பல்வேறு முகாம்களில் தடுப்பூசி ஊசி போடுவதற்காக வரும் மக்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் எனக் கூறிய அவர், மக்கள் வேகமாக பாதிக்கப்படுவதால் உருமாறிய கொரோனா பரவுகிறதா என்பதை கண்டறிய மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்