ரூ. 100 கோடி மாமூல் குற்றச்சாட்டு - முதல்கட்ட விசாரணையை தொடங்கியது சிபிஐ

மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதம்தோறும் 100 கோடி ரூபாய் வசூலித்து தருமாறு கட்டாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு குறித்து சிபிஐ முதல்கட்ட விசாரணையை தொடங்கியது.
ரூ. 100 கோடி மாமூல் குற்றச்சாட்டு - முதல்கட்ட விசாரணையை தொடங்கியது சிபிஐ
x
மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதம்தோறும் 100 கோடி ரூபாய் வசூலித்து தருமாறு கட்டாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு குறித்து சிபிஐ முதல்கட்ட விசாரணையை தொடங்கியது.  அனித் தேஷ்முக்குக்கு எதிராக இந்த குற்றச்சாட்டை முன்வைத்த முன்னாள் மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  இதனையடுத்து  அமைச்சர் பதவியில் தொடர்வது சரியாக இருக்காது எனக்கூறி அனில் தேஷ்முக் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ இவ்விவகாரத்தில் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்