மாவோயிஸ்ட் பிடியில் சி.ஆர்.பி.எப். வீர‌ர் "பேச்சுவார்த்தைக்கு தயார்" - மாவோயிஸ்ட்
பதிவு : ஏப்ரல் 07, 2021, 01:33 PM
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற மாவோயிஸ்ட் தீவிரவாத தாக்குதலில் மாயமான சி.ஆர்.பி.எப்.(CRPF) வீர‌ர், தங்கள் வசம் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற மாவோயிஸ்ட் தீவிரவாத தாக்குதலில் மாயமான சி.ஆர்.பி.எப்.(CRPF) வீர‌ர், தங்கள் வசம் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாவோயிஸ்ட்டுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சி.ஆர்.பி.எப். வீர‌ரை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும், மத்தியஸ்தர்களை அனுப்பி வைத்தார் வீர‌ரை விடுவிக்க தயார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 4 மாவோயிட்டுகள் உயிரிழந்த‌தாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

"மாமனிதன்" - முதல் பாடல் இன்று வெளியீடு

விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது. இப்படத்தில் இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் முதன் முறையாக இணைந்து இசையமைத்துள்ளார்கள் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. "தட்டிப்புட்டா தட்டிப்புட்டா" என்ற பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரிக்‌ஷா ஓட்டுநரைத் தாக்கும் போலீசார் : முகக்கவசம் சரியாக அணியாததால் பரிதாபம்

மத்திய பிரதேசத்தில் ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் முகக்கவசம் சரியாக அணியாததால், காவலர்கள் இருவர் அவரை சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கிருஷ்ணா கேயர் என்ற 35 வயது மதிக்கத்தக்க ரிக்‌ஷா ஓட்டுநர், உடல்நிலை சரியில்லாத தன் தந்தையைப் பார்க்க மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த போது, முகக்கவசம் மூக்கிற்குக் கீழே நழுவியிருந்ததால்  காவல் துறையினர் அந்த நபரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இரு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்திய பொருளாதார வளர்ச்சி: "நடப்பு ஆண்டில் 12.5 % சதவீதமாக இருக்கும்" 

நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி, சீனாவை விட அதிகமாக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது. வருடாந்திர உலக பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ள சர்வதேச நிதியம், உலக பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாகவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி  12.5 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது. சீனாவை பொறுத்தவரையில் பொருளாதார வளர்ச்சி 8.6 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. அடுத்த ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், சீன பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாகவும் இருக்கும் என்றும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூத்துக் குலுங்கும் கார்ல்ஸ்பாட் பூந்தோட்டம்

கலிஃபோர்னியாவின் புகழ்பெற்ற கார்ல்ஸ்பாட் பூந்தோட்டத்தில் மலர்கள் பூத்துக் குலுங்கும் நிலையில், அதைக் காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். வடக்கு சான்டியாகோ பகுதியில் உள்ள இந்தப் பூந்தோட்டத்தில் சுமார் 7 கோடிக்கும் அதிகமான பூக்கள் மலர்ந்து பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. கொரோனா தளர்வுகள் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கார்ல்ஸ்பாட் பூந்தோட்டம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலாப்பயணிகள் கருத்து தெரிவித்தனர்

14-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் : ஏப்.9-ஆம் தேதி தொடக்கம்

14-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக் கொள்கின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ரசிகர்களை தயாராக இருக்குமாறு இரு அணி கேப்டன்களும் டுவிட்டரில் கூறி உள்ளனர். கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நடைபெற உள்ள இந்த ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

70 views

பிற செய்திகள்

அருங்காட்சியகங்களை உடனடியாக மூட உத்தரவு - மத்திய தொல்லியல் துறை உத்தரவு

அருங்காட்சியகங்களை உடனடியாக மூட உத்தரவு - மத்திய தொல்லியல் துறை உத்தரவு

10 views

முதுநிலை மருத்துவ நீட் தேர்வு ஒத்திவைப்பு.. தேதி பின்னர் அறிவிக்கப்படும் - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

முதுநிலை மருத்துவ நீட் தேர்வு ஒத்திவைப்பு.. தேதி பின்னர் அறிவிக்கப்படும் - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

9 views

ரிசர்வ் வங்கி முன்னெடுத்துள்ள கடன் பத்திர திட்டம்.. பலனளிக்காது என்கிறது மூடிஸ் ஆய்வு நிறுவனம்

ரிசர்வ் வங்கி முன்னெடுத்துள்ள கடன் பத்திர திட்டம்.. பலனளிக்காது என்கிறது மூடிஸ் ஆய்வு நிறுவனம்

10 views

"தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு" - மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு

நாட்டில் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

26 views

கேரளாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை - 2-வது தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல்

கேரளாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல பகுதிகளில் 2-வது தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

39 views

முன்பகையால் நடந்த கொடூர சம்பவம் - 6 மாத குழந்தையையும் விட்டு வைக்காத கும்பல்

ஆந்திர மாநிலத்தில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.