தோற்றால் விமர்சனம் செய்வார்கள்; வெற்றி பெற்றால் பாராட்ட மனம் இருக்காது - மோடி

ஒரே இந்தியா என்ற சியாம பிரசாத் முகர்ஜியின் கனவை நனவாக்கி உள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தோற்றால் விமர்சனம் செய்வார்கள்; வெற்றி பெற்றால் பாராட்ட மனம் இருக்காது - மோடி
x
ஒரே இந்தியா என்ற சியாம பிரசாத் முகர்ஜியின் கனவை நனவாக்கி உள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. உருவாக்கப்பட்ட 41 வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அக்கட்சியினருக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.சி.ஏ.ஏ., வேளாண் சட்டங்கள், தொழி​லாளர் நலச் சட்டங்கள் என எல்லாவற்றையும் பற்றி தவறான கண்ணோட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்கவே அவ்வாறு நடைபெறுவதாக குற்றம்சாட்டி உள்ளார். சிலரிடம் உங்கள் குடியுரிமை பறிக்கப்படும் என்றும், விவசாயிகளிடம் உங்கள் நிலம் பறிக்கப்படும் என அப்பட்டமான பொய்களை பரப்பி வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க பா.ஜ.க. தொண்டர்கள் உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பா.ஜ.க. வெற்றி பெற்றால், தேர்தலில் வெற்றி அடையச் செய்யும் எந்திரம் என்று கூறுவார்கள் எனவும், அதே நேரத்தில் மற்றவர்கள் வெற்றி பெற்றால் பாராட்ட மனமிருக்காது என எதிர்க்கட்சிகளை சாடியுள்ளார் மோடி. எங்களை குறை கூறுபவர்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக அறியாதவர்கள் என்றும், பா.ஜ.க. தேர்தலில் வெல்லும் இயந்திரம் அல் ல என்றும், அது மேற்கொள்ளும் நடவடிக்கை மக்களை பா.ஜ.க. உடன் இணைக்கும் சக்தியை கொண்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்