மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ராஜினாமா - முதல்வரிடம் அனில் தேஷ்முக் கடிதம்

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
x
மாதம்தோறும் 100 கோடி ரூபாய் வசூலித்து தருமாறு தேஷ்முக் கட்டாயப்படுத்தியதாக, முன்னாள் மும்பை காவல் ஆணையர் புகார் கூறியிருந்தார். இதையடுத்து, இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், ஆதாரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யுமாறும் தெரிவித்தது. இந்த நிலையில், அமைச்சர் பதவியில் தொடர்வது சரியாக இருக்காது எனக்கூறி, அனில் தேஷ்முக், தனது ராஜினாமா கடிதத்தை, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் வழங்கியுள்ளார். முன்னதாக  தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார் மற்றும் மூத்த நிர்வாகிகளிடம், தனது ராஜினாமா முடிவு குறித்து, அனில் தேஷ்முக் நேரில் சந்தித்து தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்