மகாராஷ்டிராவில் கடும் ஊரடங்கு - ஏப்ரல் 5 முதல் 30ம் தேதி வரை தொடரும்...

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அம்மாநில அரசாங்கம் கடுமையான ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடும் ஊரடங்கு - ஏப்ரல் 5 முதல் 30ம் தேதி வரை தொடரும்...
x
கொரோனா பெருந்தொற்றானது நாட்டில் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் வார இறுதியில் முழு ஊரடங்கு மற்றும் நாள் முழுதும் இரவு ஊரடங்கும் அமலபடுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 5ம் தேதி இரவு 8 மணி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை இம்முறை தொடரும்.  புதிய விதிகளின் படி விவசாயம் தொடர்பான பணிகள் முன்பு போலவே தொடரும் எனவும், ஏப்ரம் 30ம் தேதி வரை வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் எனவும், உணவகங்களில் பார்சல் வசதிக்கு மட்டுமே அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் எனவும், பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்