இந்தியாவில் ஒரே நாளில் 1,03,558 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
x
இந்தியாவில் ஒரே நாளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 67 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 478 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 65 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 7 லட்சத்து 41 ஆயிரத்து 830 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி பதிவான 97 ஆயிரத்து 984 என்ற எண்ணிக்கையே இதுவரை அதிகப்பட்ச பாதிப்பாக இருந்தது. இந்நிலையில், தற்போது, 1 லட்சத்து 3 ஆயிரத்து 558 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதில், அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும்,  57 ஆயிரத்து 74 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 7 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 163 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்