உள்ளூர் மக்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை - ஆளுநரிடம் முறையிட்ட மம்தா பானர்ஜி

வெளிமாநிலங்களில் இருந்து குண்டர்களை வரவழைத்து வாக்குப்பதிவுக்கு பாஜக இடையூறு செய்வதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
உள்ளூர் மக்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை - ஆளுநரிடம் முறையிட்ட மம்தா பானர்ஜி
x
வெளிமாநிலங்களில் இருந்து குண்டர்களை வரவழைத்து வாக்குப்பதிவுக்கு பாஜக இடையூறு செய்வதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். 

மேற்குவங்கத்தில் 2ம் கட்ட தேர்தலையொட்டி, தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மம்தா ஆய்வு மேற்கொண்டார். அவரது வருகைக்கு எதிராக சிலர் கோஷமிட்ட நிலையில், பீகார், உத்தரபிரதேசத்தில் இருந்து குண்டர்களை வரவழைத்து பாஜக ரகளையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து வாக்கு மையத்தில் இருந்து அம்மாநில ஆளுநரை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட அவர், உள்ளூர் மக்களை வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும், இதனை ஆய்வு செய்யுமாறும் வலியுறுத்தினார். காலை முதல் தேர்தல் அத்துமீறல் தொடர்பாக 63 புகார்கள் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்