வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தரப்பில் இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்
x
மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில்,  போராட்டம் 4 மாதங்களை கடந்திருக்கிறது. இந்நிலையில் தமிழகம், மேற்கு வங்கம் உள்பட  சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்கள் தவிர்த்து நாடு தழுவிய 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்தது. அதன்படி டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் ஆங்காங்கே சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்