உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள என்.வி. ரமணா கடந்து வந்த பாதை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள என்.வி. ரமணா கடந்து வந்த பாதை குறித்து காணலாம்..
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள என்.வி. ரமணா கடந்து வந்த பாதை
x
நீதிபதி  என்.வி. ரமணா ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பொன்னாபுரம் கிராமத்தில் 1957 ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறந்தவர். ஆந்திரா சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், 1983 பிப்ரவரி 10 ஆம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்துக் கொண்டார். ஆந்திரா உயர்நீதிமன்றம், பல தீர்ப்பாயங்களில் வழக்கறிஞராக பணியாற்றிய இவர், மாநிலங்களுக்கு இடையிலான கிருஷ்ணா உள்ளிட்ட நதிநீர் பங்கீட்டு வழக்குகளில் பிரபலமாக அறியப்பட்டவர். 2013-ல் ஆந்திரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான அவர், டெல்லி உயர்நீதிமன்றத்திலும் பணியாற்றினார். பின்னர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2014-ல் நியமனம் செய்யப்பட்ட அவருடைய பதவிக்காலம் 2022 ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரையில் உள்ளது. தற்போது உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவை நியமனம் செய்ய தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் அவர் நாட்டின் 48-வது தலைமை நீதிபதியாக பதவியேற்பார்.

Next Story

மேலும் செய்திகள்