ஓ.டி.டி. தளங்களை கட்டுப்படுத்தும் விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பதிவு : மார்ச் 23, 2021, 07:14 PM
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஓ.டி.டி. தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட தனிநபர் வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட ஓ.டி.டி. தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட தனிநபர் வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

ஒ.டி.டி. தளங்களில் வரக்கூடிய கருத்துக்களை உன்னிப்பாக கவனிக்க கூடிய பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தளங்களில் வெளியாகும் திரைப் படங்களில் உள்ள கருத்துக்கள் தொடர்பாக பொது மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில முதல்வர் களிடம் இருந்து நிறைய புகார்கள் வந்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தப் புகார்களை விசாரிப்பதற்காக தனி அமைப்பை உருவாக்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒ.டி.டி. தளங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு சமூக வலைதள ஊடகங்களையும் கண்காணிப்பு பணிகளை உருவாக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி தொடரப்பட்ட மனு தொடர்பாக பதிலளிக்க  மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6572 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1187 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

255 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

67 views

பிற செய்திகள்

கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு மருந்து : 2-டிஜி மருந்து செயல்படுவது எப்படி...?

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ள 2-டிஜி மருந்து செயல்படுவது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்...

24 views

புதையலுக்காக சுரங்கம் தோண்டிய சம்பவம் - ஒரு ஆண்டில் 80 அடி ஆழ சுரங்கம் அமைப்பு

திருப்பதி சேஷாசலம் மலையில் புதையல் எடுப்பதாக கூறி 80 அடியில் சுரங்கம் அமைத்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

68 views

கொரோனாவால் உயிரிழக்கும் நபர்கள் - கங்கையில் வீசப்படும் உடல்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் ஓடும் கங்கை நதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து வீசப்பட்டு வருகின்றன.

325 views

டவ் தே புயல் தாக்கத்தால் கனமழை - மரங்கள், மின்கம்பங்கள் சேதம்

டவ் தே புயலால் கேரளாவின் கடலோர மாவட்டங்களில் சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

36 views

குஜராத்தில் கரையைக் கடக்கும் டவ்-தே புயல்; சீற்றத்துடன் காணப்படும் கடல்

அரபிக்கடலில் அதி தீவிர சூறாவளிப் புயலாக நிலை கொண்டுள்ள டவ்-தே புயல், குஜராத்தில் கரையைக் கடக்க உள்ள நிலையில், மகாராஸ்டிர மாநிலம் மும்பையில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.

51 views

லஞ்ச குற்றச்சாட்டு வழக்கு; மேற்கு வங்க அமைச்சர்கள் கைது - முதல்வர் மம்தா ஆவேசம்

லஞ்ச குற்றச்சாட்டு வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்களை சிபிஐ கைது செய்துள்ள நிலையில், தன்னையும் கைது செய்யுமாறு சிபிஐ அதிகாரிகளிடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறி உள்ளார்.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.