அசாம் தேர்தல் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
பதிவு : மார்ச் 21, 2021, 02:00 PM
அசாம் மாநில தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி '5  உத்தரவாதங்கள்' என்ற அடிப்படையில் பிரசாரம் செய்து வருகிறது.இதில் முக்கிய வாக்குறுதிகளாக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என்றும்,அரசு துறையில் ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை என்றும் தனியார் துறையில் 25 லட்சம் இளைஞர்களுக்கு வேலை அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினக்கூலி 365 ரூபாயாக உயர்ந்தப்படும் என்றும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மகளிரை கவரும் வகையில் இல்லதரசிகளுக்கு மாதம் தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை வாக்குறுதிகளை தவிர்த்து பெண்களுக்கு இலவச போக்குவரத்து பயணம்,அனைத்து தொகுதியிலும் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பாஜகவால் மூடப்பட்ட பேப்பர் ஆலைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அசாம் மாநிலத்திற்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் நீட்டிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4797 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

454 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

370 views

நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

255 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

246 views

பிற செய்திகள்

அதிமுக உட்கட்சி தேர்தல் - விளக்கம்

கொரோனா தாக்கத்தால் உள்கட்சி தேர்தல் நடத்த அதிமுக தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

13 views

அதிமுக பொதுக்குழு தீர்மான விவகாரம் - சசிகலா வழக்கை ரத்து செய்ய கோரி மனு

பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து சசிகலா தரப்பு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

75 views

திருப்பதி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் - ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் தாக்கு

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு, விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.

47 views

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

763 views

கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்கு நிதி ஒதுக்கவேண்டும் - ஜோதிமணி, எம்.பி

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

294 views

திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருக்கும் மையங்களை கவனமாக பாதுகாத்திட வேண்டும் என திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

313 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.