12-ஆவது முறையாக புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டி போட்டி

கேரள மாநில முன்னாள் முதலமைச்சரான உம்மன் சாண்டி, தனக்கு 3 கோடியே 41 லட்ச ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகள் உள்ளதாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
12-ஆவது முறையாக புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டி போட்டி
x
கேரள மாநில முன்னாள் முதலமைச்சரான உம்மன் சாண்டி, தனக்கு 3 கோடியே 41 லட்ச ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகள் உள்ளதாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் தொடா்ந்து 12-ஆவது முறையாக புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக  உம்மன் சாண்டி போட்டியிடுகிறார்.

அதில் தனக்கு எதிராக நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், வங்கியில் ரூ. 67 ஆயிரத்து 704 முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு 3 கோடியே 41 லட்ச ரூபாய் அசையா சொத்துகளும், 2 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் அசையும் சொத்துகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதலீடாக தனது மனைவி பெயரில் 24 லட்சத்து 83 ஆயிரத்து 92 ரூபாய் பணம் வங்கியில் உள்ளதாகவும், மகன் பெயரில் 14 லட்சத்து 58 ஆயிரத்து 570 ரூபாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தன் வசம் கையில் ரொக்கமாக ஆயிரம் ரூபாயும், மனைவியிடம் 5 ஆயிரம் ரூபாயும், மகனிடம் 7500 ரூபாய் உள்ளதாகவும் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஹரிபாட் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவரான ரமேஷ் சென்னிதலா, தன்னிடம் ஒரு கோடியே 23 லட்ச ரூபாய் சொத்துகள் உள்ளதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

தன் மனைவி அனிதா ரமேஷ் பெயரில் 2 கோடியே 20 லட்சத்து 77 ஆயிரத்து 33 ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளதாகவும் 

 
கடந்த ஆண்டு தனக்கு 5 லட்சத்து 15 ஆயிரத்து 930 ரூபாய் வருவாய் கிடைத்ததாகவும், தனக்கு எதிராக 8 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்