கொரோனா பாதிப்பு 43% உயர்வு - ராஜேஷ் பூஷண்

இந்தியாவில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், கொரோனா பாதிப்பு 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு 43% உயர்வு - ராஜேஷ் பூஷண்
x
இந்தியாவில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், கொரோனா பாதிப்பு 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.டெல்லியில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கடந்த பிப்ரவரி 9 - ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்து 110 என்ற எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில், தற்பொழுது 28 ஆயிரம் என்ற இலக்கை எட்டி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மொத்தமாக இந்தியாவில் 16 மாநிலங்களில் உள்ள 70 மாவட்டங்களில் கொரோனா பரவல் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.இந்தியாவிலேயே ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்படுவதாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார். இது வரை 22 கோடிக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாக, ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.இந்தியாவில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், கொரோனா பாதிப்பு 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்