மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு - திரிணாமுல் காங். கட்சியினரின் அதிருப்தி பாஜகவிற்கு சாதகமாக அமையுமா ?
பதிவு : மார்ச் 08, 2021, 04:29 PM
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் கட்சியின் மீது எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 296 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பட்டுள்ளது.இதில் பல்வேறு காரணங்களால் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 27 உறுப்பினர்கள் மற்றும் சில அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நபர்களில் ஒருவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஷிபுர் தொகுதி எம்.எல்.ஏ ஜாத்து லஹிரி.ஜாத்து லஹிரிக்கு பதிலாக அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் கட்சியில் இருந்து விலகியுள்ள ஜாத்து லஹிரி, தாம் பாஜாகவில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைபோல் பங்கார் தொகுதியில் போட்டியிட கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அரபுல் இஸ்லாமுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இத்தனைக்கும் அரபுல் இஸ்லாம் மம்தா பானர்ஜியின் நெருக்கமான நம்பிக்கைக்குரியவராகவும், கட்சியின் முக்கிய தலைவராகவும் பார்க்கப்பட்டவர்.மேலும், அம்தங்கா தொகுதியில் போட்டியிட்ட இரண்டு முறை எம்எல்ஏவான ரஃபிகுர் ரகுமானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதேபோல தற்போது எம்எல்ஏ வாக இருக்கும் சொனாலி குஹாவுக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு நேரலையின் போது அவர் கண்ணீர் விட்டு அழுதார்.இப்படி அதிருப்தியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பலரும் பாஜகவில் இணையக்கூடும், அல்லது கட்சிக்குள் உள்ளடி வேலைகள் நடக்க கூடும் என சர்ச்சை எழுந்துள்ளது.ஏற்கனவே மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கும், திரிணாமுல் காங்கிரஸுக்கு கடும் போட்டி நிலவி வரும் சூழலில், இது பாஜகவிற்கு சாதகமாக அமையுமா என்பதை தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே தெரியவரும்


தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

49 views

பிற செய்திகள்

ரமலான் நோன்பின் முதல் நாள்; வீடுகளிலேயே தொழுகை

டெல்லி ஜமா மஸ்ஜித் மசூதி அருகே உள்ள மார்க்கெட்டில், கொரோனா அச்சம் காரணமாக ரமலான் நோன்பின் முதல் நாளில், வழக்கத்திற்கு மாறாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன

6 views

கொரோனா பரவல் அதிகரிப்பு - ஜும்மா மசூதி பகுதியில் கடைகள் மூடல்

கொரோனா பரவல் எதிரொலியாக டெல்லி ஜும்மா மசூதி பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன.

5 views

24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் -மத்திய சுகாதார துறை தகவல்

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு ஆயிரத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

12 views

"எங்கள் பிரதமரை பற்றி நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள்" - மம்தா மீது ராஜ்நாத் சிங் பாய்ச்சல்

எங்கள் பிரதமரை பற்றி நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள் என்று மம்தா பானர்ஜியை கடுமையாக சாடியுள்ளார், பா.ஜ.க.மூத்த தலைவரான ராஜ்நாத் சிங்

33 views

புலம்பெயர் குழந்தைகளின் உரிமை வழக்கு - தமிழக அரசு பதில் மனு

புலம்பெயர் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க கோரிய வழக்கில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

9 views

"சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு - ரத்து செய்க" : மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வலியுறுத்தல்

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்,.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.