தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் மனோதிடம் - பெண்களை பொறுத்தே நாட்டின் முன்னேற்றம்

சகலகலா வல்லவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் நாட்டின் பாதுகாப்பை பெண்கள் தங்கள் கையில் எடுத்து வீரமங்கைகளாக வலம் வருவது குறித்து மகளிர் தினமான இன்று பார்க்கலாம்.
தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் மனோதிடம் - பெண்களை பொறுத்தே நாட்டின் முன்னேற்றம்
x
சகலகலா வல்லவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் நாட்டின் பாதுகாப்பை பெண்கள் தங்கள் கையில் எடுத்து வீரமங்கைகளாக வலம் வருவது குறித்து  மகளிர் தினமான இன்று பார்க்கலாம்....

பெண்கள் இல்லாத துறையே இல்லை என்கின்ற அளவிற்கு அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக  கால்பதித்து சாதித்து வருகின்றனர், பெண்கள். 

"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்" என்ற குறளில் பெண் வல்லமை பெற்ற ஆளுமை என்பதை எடுத்துரைதிருக்கிறார், வள்ளுவர்.

தன்னையும் தனது குடும்பத்தையும் மட்டும் தற்காத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவள் மட்டுமல்ல பெண், 

ஒட்டுமொத்த தேசத்தின் பாதுகாப்பையும் பேணிக்காப்பவர்கள் பெண்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள், சிஆர்பிஎஃப் வீராங்கனைகள்.

நாட்டின் பாதுகாப்பில் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி, 
1986ஆம் ஆண்டு துணை இராணுவக் படையான சிஆர்பிஎப் பில் மகிளா பட்டாலியனை அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே துணை ராணுவத்தில் பெண்களுக்கு தனி படை  உருவாக்கப்பட்டது இதுவே முதல் முறை.

Next Story

மேலும் செய்திகள்