பிரதமர் மோடிக்கு எரிசக்தி தலைமைத்துவ விருது

செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடிக்கு எரிசக்தி தலைமைத்துவ விருது
x
நடப்பு ஆண்டுக்கான செராவீக் சர்வதேச எரிசக்தி மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் செராவீக் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அப்போது பேசிய மோடி, இந்த விருதை இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறினார். சுற்றுச்சூழலுக்காக போராடுவதில், மகாத்மா காந்தியை போல ஒருவர் வாழ்ந்தது இல்லை என்று மோடி கூறினார். காந்தி காட்டிய வழியை பின்பற்றி இருந்தால், மனித குலம், பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்து இருக்காது என்று குறிப்பிட்டார். 2030-ம் ஆண்டிக்குள் இயற்கை எரிவாயு உற்பத்தியில், இந்தியாவின் பங்கை 6 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதம் ஆக அதிகரிக்க பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்