பா.ஜ.க. முதலமைச்சர் வேட்பாளர்? "மெட்ரோமேன் ஸ்ரீதரனை நான் அறிவிக்கவில்லை" - மாநில பா.ஜ.க. தலைவர் மறுப்பு

கேரளாவில் பாஜக முதலமைச்சர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரனை தாம் அறிவிக்கவில்லை என அம்மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. முதலமைச்சர் வேட்பாளர்? மெட்ரோமேன் ஸ்ரீதரனை நான் அறிவிக்கவில்லை - மாநில பா.ஜ.க. தலைவர் மறுப்பு
x
மெட்ரோமேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன் 
கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். 88 வயதான அவர் , தாம் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட போவதாக கூறினார். தேர்தலில் நிற்க போவதாகவும் ஸ்ரீதரன் அறிவித்தார். கேரளாவில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் முதலமைச்சர் பொறுப்பை 
தாம் ஏற்க தயார் என்றும் ஸ்ரீதரன் தெரிவித்தார். 

இதையடுத்து  கேரளாவில் பாஜக முதலமைச்சர்  வேட்பாளராக மெட்ரோமேன் ஸ்ரீதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் நேற்று அறிவித்தார். இந்நிலையில் 
அவர் திடீரென மறுத்துள்ளார். முதலமைச்சர்  வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமைதான் அறிவிக்கும் என்றும் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். 
முதலச்சராக  ஸ்ரீதரனை பார்க்க  மக்கள் விரும்புவதாக தான் குறிப்பிட்டதாக சுரேந்திரன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்