இந்திய மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்திய மீனவர்கள் பன்னாட்டு கடல் எல்லைகளை கடந்து செல்ல கூடாது என மத்திய , மாநில அரசுகள் மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்திய மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
இந்திய மீனவர்கள்  பன்னாட்டு  கடல் எல்லைகளை  கடந்து செல்ல  கூடாது என மத்திய , மாநில அரசுகள்  மீனவர்களிடம் விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் அத்துமீறி இந்திய மீனவர்களை தாக்குவதை தடுக்க  நடவடிக்கை எடுக்க கோரி ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். 

கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்து 500 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஏராளமான படகுகள் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்துள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தார்.  

தமிழகத்தில்  நாகை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தற்போதும் இலங்கை சிறைகளில் உள்ளதாகவும், அவர்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் பதில் மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள், கடல் எல்லையை கடக்காமல் மீன் பிடிப்பது எவ்வாறு என உரிய வழிமுறைகளை வகுத்து மீனவர்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்

பன்னாட்டு கடல் எல்லையில் கடக்கும் போது எச்சரிக்கை மணி எழுப்பும் வகையில் தேவையான நவீன கருவிகளை மீனவர்களுக்கு வழங்கி பயன்படுத்த செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்