உச்சநீதிமன்ற விசாரணையை அரசியல் ஆக்க கூடாது - இந்திய பார் கவுன்சில் கருத்து

உச்சநீதிமன்ற விசாரணையை அரசியல் ஆக்கக்கூடாது என இந்திய பார்கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற விசாரணையை அரசியல் ஆக்க கூடாது - இந்திய பார் கவுன்சில் கருத்து
x
உச்சநீதிமன்ற விசாரணையை அரசியல் ஆக்கக்கூடாது என இந்திய பார்கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய பார்கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அண்மை காலமாக உச்சநீதிமன்ற விசாரணயின் போது நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்களை சமூக ஆர்வலர் என சொல்லிக் கொள்பவர்கள் கடுமையாக விமர்சித்து வருவதாக கூறியுள்ளார்.  இது சுதந்திரமான நீதித்துறையின் மீது நடத்தப்படும் தாக்குதலாக கருத வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இது போன்று நீதித்துறை மீதான தாக்குதலை அனுமதித்தால், உச்சநீதிமன்றத்தின் புனிதம் கெட்டுவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.  எனவே, இது போன்ற தவறான பிரசாரங்களை முன்னெடுக்க கூடாது என்றும்,  உச்சநீதிமன்றத்துக்கு எழுதும் கடிதங்களை பொது வெளியில்  வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பு என்றும், இந்திய பார்கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்