கொரோனா தடுப்புக்கு புதிய சொட்டு மருந்து - பாரத் பயோ டெக் நிறுவனம் கண்டுபிடிப்பு

கொரோனாவை தடுத்திட, மூக்கு வழியே செலுத்தப்படும் தடுப்பு மருந்திற்கான முதல்கட்ட பரிசோதனையை, பாரத் பயோ டெக் நிறுவனம் துவக்கியுள்ளது.
கொரோனா தடுப்புக்கு புதிய சொட்டு மருந்து - பாரத் பயோ டெக் நிறுவனம் கண்டுபிடிப்பு
x
ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்ஸின் என்ற கொரோனா தடுப்பு மருந்து, தற்போது பொது மக்களுக்கு ஊசி வழியாக செலுத்தப்பட்டு வருகிறது. இது தவிர மூக்கு வழியாக  செலுத்தப்படும் BBV154 சொட்டு மருந்தை,  பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இவற்றை மனித உடலில் செலுத்தி பரிசோதனை செய்வதற்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பயோடெக் நிறுவனம் முன் வைத்திருந்தது. இதற்கு சில வாரங்களுக்கு முன்பு அனுமதி அளித்ததை தொடர்ந்து முதற்கட்ட பரிசோதனையை  அந்நிறுவனம் துவங்கி உள்ளது. ஹைதராபாத் நாக்பூர் சென்னை பாட்னா உள்ளிட்ட 4 மையங்களில் உள்ள 125 தன்னார்வலர்களிடம் முதற்கட்ட பரிசோதனைகள் துவங்கியுள்ளன. சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தால், பொதுமக்கள் தாங்களாகவே சொட்டு மருந்தை நாசி வழியே போடலாம். கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தில் இது முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்