ஸ்பெக்ட்ரம் ஏலம் - ரிலையன்ஸ் முதலிடம்

2 நாட்கள் நடைபெற்ற ஏலத்தில் 77 ஆயிரத்து 815 கோடி ரூபாய்க்கு அலைக்கற்றை விற்பனை செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஏலம் - ரிலையன்ஸ் முதலிடம்
x
தொலை தொடர்புத்துறை நடத்திய அலைக்கற்றை ஏலத்தில் பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 57 ஆயிரத்து 122 கோடி ரூபாய் மதிப்பிலான 488 புள்ளி 35 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலம் எடுத்துள்ளது. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் 18 ஆயிரத்து 698 கோடி மதிப்புள்ள 355 புள்ளி 45 மெகா ஹெர்ட்ஸ் ரேடியோ அலைகளையும், வோடபோன் ஐடியா நிறுவனம் ஆயிரத்து 993  கோடி ரூபாய் மதிப்புள்ள 11 புள்ளி 80 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தையும் வாங்கியுள்ளதாக  மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2 நாட்கள் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம், 77 ஆயிரத்து 814 கோடி ரூபாய் மதிப்புள்ள 855 புள்ளி 60 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஏலமிடப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்