முதலீட்டாளர்களுக்கு பிரதமர் அழைப்பு

கடற்சார் வாணிபத்தில் இந்தியா கணிசமான வரலாற்றை தன்னகத்தே கொண்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களுக்கு பிரதமர் அழைப்பு
x
கடற்சார் வாணிபத்தில் இந்தியா கணிசமான வரலாற்றை தன்னகத்தே கொண்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

இந்திய கடற்சார் வாணிபம் தொடர்பான உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த மாநாடு இந்த துறை சார்ந்த பலரை ஒருங்கிணைத்து உள்ளதாக குறிப்பிட்டார். மேலும்,  

கடற்சார் வாணிகத்துக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இந்தியாவின் இந்த முயற்சியில், உலக நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கு பெறவும் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

2030 க்குள் நாடு முழுவதும் 23 நீர் வழித் தடங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இந்திய கடற்கரையோரங்களில் நாகரிகம் செழித்து தழைத் தோங்கியதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டி உள்ளார்.

நாட்டில் உள்ள 189 கலங்கரை விளக்கங்கள் உள்ள பகுதிகளில்,  78  பகுதிகளை தேர்ந்தெடுத்து சுற்றுலாவை மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்