அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.2,100 கோடி நிதி வசூல்

அயோத்தியில் ராமர் கோவில் 2 ஆயிரத்து 100 கோடி நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கோவில் கட்ட நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிடவும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக வசூலாகியுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.2,100 கோடி நிதி வசூல்
x
அயோத்தியில் ராமர் கோவில் 2 ஆயிரத்து 100 கோடி நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.  கோவில் கட்ட நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிடவும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக வசூலாகியுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.  உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவிலை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோவில் கட்டும் பணிகளை மேற்கொள்ளும் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை,  நன்கொடை பெறும் பணியை கடந்த ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கியது. 


பிப்ரவரி 27 ஆம் தேதி வரையில் நன்கொடையை பெற திட்டமிட்ட அறக்கட்டளை, அதற்குள் ஆயிரத்து 100 கோடி ரூபாய் நிதியை திரட்ட இலக்கு நிர்ணயம் செய்தது. அதன்படி 45 நாட்களாக நடைபெற்று வந்த நன்கொடை பெறும் பணி சனிக்கிழமையுடன் முடிந்த நிலையில், 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கோவில் கட்ட நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிடவும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக வசூலாகியுள்ளது எனவும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.  விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் 40 லட்சம் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, பல்வேறு மாநிலங்களில் நகரங்கள், கிராமங்களில் வீடு, வீடாக நேரில் சென்று நிதி வசூல் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  குடியரசு தலைவர் முதல் சாலையோரத்தில் வசிக்கும் சாமானிய மக்கள் வரையில் பக்தியுடன் நிதி வழங்கி பகவான் ராமர் உடன் தங்களை இணைத்து கொண்டிருப்பதாக  விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்