வன்முறை உறவை பாதிக்கும் - சீனாவுக்கு எச்சரிக்கை

எல்லையில் வன்முறையின் மூலம் அமைதியை சீர்குலைத்தால் இருதரப்பு உறவில் மேலும் பாதிப்பு ஏற்படும் என சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது.
வன்முறை உறவை பாதிக்கும் - சீனாவுக்கு எச்சரிக்கை
x
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று மாலை சீன வெளியுறவுத்துறை அமைச்சர்  வாங் யியை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  சுமார் 75 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக் பகுதியில் எல்லையில் நிலவும் சூழல் குறித்தும், பிற இருதரப்பு பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   கடந்த ஒராண்டாக இருதரப்பு உறவு மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என சீன தரப்பிடம் கூறியிருக்கும் ஜெய்சங்கர், எல்லையில் வன்முறையின் மூலம் அமைதியை சீர்குலைப்பது, இருதரப்பு உறவை மேலும் மோசமாக்கும் என எடுத்துரைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு தொடர் பேச்சுவார்த்தை பாங்காங் சோ ஏரி பகுதியில் அமைதியாக ராணுவத்தை விலக்கிக்கொள்ள வழிவகை செய்துள்ளது என சீன தரப்பிடம் ஜெய்சங்கர் எடுத்துரைத்துள்ளார். மேலும் கிழக்கு லடாக்கில் அசல் எல்லைக் கோடு தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண வேண்டும் என சீன தரப்பை ஜெய்சங்க வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்