"வெற்றிக்கான புதிய பாதை ; தோல்விகள் உருவாக்கும் "- பிரதமர்

மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் ஐ.ஐ.டி.-யின் 66-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.
வெற்றிக்கான புதிய பாதை ; தோல்விகள் உருவாக்கும் - பிரதமர்
x
அப்போது பேசிய பிரதமர், இன்றைய தினம் பட்டம் பெறும் மாணவர்களுக்கு மட்டுமல்ல புதிய இந்தியாவை உருவாக்குவதற்கும் முக்கிய நாள் என குறிப்பிட்டார்.நிகழ்காலத்தை உன்னிப்பாக கவனிக்கும் அதேவேளையில், வரும் காலத்தையும் எதிர்பார்க்க வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படக்கூடிய தேவைகளுக்காகவும் மாணவர்கள் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.பிரச்சனையின் தன்மையை முதலில் புரிந்து கொள்வது நீண்டகால தீர்வுக்கு நம்மை இட்டுச் செல்லும் என குறிப்பிட்ட பிரதமர், மாணவர்கள் தன்னம்பிக்கை, சுயநலமின்மை, சுயவிழிப்புடன் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் சூழல் மாறி விட்டதாகவும் விருப்பங்களும் தேவைகளும் மாறிவிட்டதாக குறிப்பிட்டார்.ஒவ்வொரு விஞ்ஞானியும் தோல்வியின் அனுபவத்திலிருந்து புதிய வழிகளை கற்றுக் கொள்வதாக குறிப்பிட்ட அவர் தோல்விகள் வெற்றிக்கான புதிய பாதையை உருவாக்கும் என குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்