அடுத்த அதிர்ச்சி..! கொரோனா காலத்தில், கண் பாதிப்பு அதிகரிப்பு

கொரனோ கால கட்டத்தில் கண்புரை, உலர் கண் பாதிப்பு உள்ளிட்ட கண் தொடர்பான பிரச்சினைகள் 5 மடங்கு அதிகரித்து இருப்பதாக மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த அதிர்ச்சி..! கொரோனா காலத்தில், கண் பாதிப்பு அதிகரிப்பு
x
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும், கொரனோ தொற்றால் குணமடைந்த பலருக்கு,  உடல் சார்ந்த மற்ற பிரச்சினைகள் கண்டறியப்பட்டு வருவது, அச்சத்தையே அதிகரிக்க செய்கிறது. நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் முழுவதும், பல இடங்களில் கொரோனோவுக்கு பிந்தைய சிகிச்சை மையங்கள் துவங்கப்பட்டு உள்ளன. தொற்றிலிருந்து குணமாகும் சிலருக்கு ஏற்படும், உள்ளுறுப்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு, இந்த சிகிச்சை மையங்களில் சிறப்பான சிகிச்சை தரப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரனோ காலகட்டத்தில், பலருக்கு, கண் தொடர்பான பிரச்சினைகள், அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கொரனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, மற்றவர்களுக்கும், கண்புரை நோய், தீவிர உலர் கண் பிரச்சினை, கண் அழுத்தம் ஆகிய பிரச்சினைகள், 5 மடங்கு அதிகமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் மருத்துவமனை செல்லாததால், கண் பாதிப்பு அதிகரித்து இருப்பதாக தெரிவித்து உள்ளார் மருத்துவர் அமர் அகர்வால்.... 

கண் பாதிப்புகளை தவிர்க்க டிஜிட்டல் சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அவர் கூறி உள்ளார்.கொரனோவில் இருந்து குணமான பின்னரும், அடுத்தடுத்து ஆபத்துகள் இவ்வாறு பின்தொடரும் நிலையில், கண்கள் தொடர்பான பிரச்சினையில், அலட்சியம் காட்டாமல், உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.....

தந்தி டிவி செய்திகளுக்காக  sதாயுமானவன்...

Next Story

மேலும் செய்திகள்